search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிக்கெட் முன்பதிவு"

    • சித்திரை திருவிழா 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    • மீனாட்சி-சுந்தரே சுவரர் திருக்கல்யாண வைபவம் 21-ந் தேதி நடக்கிறது.

    மதுரை:

    சித்திரை திருவிழா மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில், உலகப்புகழ் பெற்ற சித்திரை திருவிழா வருகிற 12-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை 9.55 மணிக்கு மேல் 10.19 மணிக்குள் மிதுன லக்னத்தில் சுவாமி சன்னதி கொடிமரத்தில் கொடியேற்றப்படுகிறது.

    விழா நாட்களில் மீனாட்சி-சுந்தரேசுவரர் காலை, இரவு என இருவேளையும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, மாசி வீதிகளை வலம் வருவர். ஏப்ரல் 19-ந் தேதி மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், 20-ந் தேதிதிக்கு விஜயம் நடைபெறுகிறது.

    சிகர நிகழ்ச்சியாக மீனாட்சி-சுந்தரே சுவரர் திருக்கல்யாண வைபவம் 21-ந் தேதி நடக்கிறது. அன்றைய தினம் காலை 8.35 மணிக்கு மேல் 8.59 மணிக்குள் திருக்கல்யாண வைபவங்கள் மேற்கு, வடக்கு ஆடி வீதி சந்திப்பில் நடைபெறும்.

    முன்பதிவு

    இந்த ஆண்டு மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை பக்தர்கள் காண வசதியாக ரூ.200, ரூ.500 கட்டண சீட்டுகள் வைத்திருப்பவர்கள் வடக்கு கோபுரம் வழியாகவும், கட்டணமில்லா தரிசன முறையில் முதலில் வருபவர்களுக்கு முதலில் அனுமதி என்ற முறையில் தெற்குகோபுரம் வழியாக மொத்தம் சுமார் 12 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். இதற்கான கட்டண டிக்கெட் முன்பதிவானது கோவில் இணையதளத்தில் maduraimeenakshi.hree.tn.gov.in இந்து சமய அறநிலையத்துறையத் துறை hrce.tn.gov.in ஆகியவற்றில் இன்று (9-ந் தேதி) முதல் 13-ந் தேதி இரவு 9 மணி வரை ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    ஒருவர் இரண்டு ரூ.500 கட்டண டிக்கெட் மட்டுமே பெற முடியும். ரூ.200 டிக்கெட்டை ஒருவர் 3 பெறலாம். ஒரே நபர் ரூ.500, ரூ.200 டிக்கெட்டுகளை பெற முடியாது. பிறந்த தேதி சரியாக இருக்க வேண்டும். பக்தர்களின் வசதிக்காக கோவிலுக்கு சொந்தமான மேற்கு சித்திரை வீதி பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் கோவில் பணியாளர்கள் மூலம் ரூ.500, ரூ.200 டிக்கெட் முன்பதிவு வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    டிக்கெட் பதிவு செய்ய வருபவர்கள் ஆதார் நகல், போட்டோவுடன் கூடிய அடையாளச் சான்று, மொபைல் எண், இ -மெயில் முகவரி ஆகியவை அளிக்க வேண்டும். அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் முன்பதிவு செய்திருந்தால் குலுக்கல் முறையில் தேர்வு செய்து மொபைல் மற்றும் இ-மெயிலில் 14-ந் தேதி அன்று தகவல் தெரிவிக்கப்படும்.

    டிக்கெட் கிடைக்குமிடம்

    அவ்வாறு டிக்கெட் உறுதி செய்யப்பட்ட தகவல் கிடைத்தவர்கள் வருகிற 15-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பிர்லா விஷ்ரம் தங்கும் விடுதியில் தங்களுக்கு வந்த எஸ்.எம்.எஸ்... இ-மெயிலை காண்பித்து பணம் செலுத்தி திருக்கல்யாண டிக்கெட்டை பெறலாம்.

    டிக்கெட் பெற்றவர்கள், திருக்கல்யாண நாளான வருகிற 21-ந் தேதி காலை 7 மணிக்குள் கோவிலுக்கு வந்து, அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தில் அமர்ந்து மீனாட்சி- சுந்தரேசுவரரை தரிசிக்கலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • தீபாவளி பண்டிகை நவம்பர் 12-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
    • நாளை காலை 8 மணி முதல் ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்குகிறது.

    சென்னை :

    ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகைக்கு சென்னையில் இருந்து ஏராளமானோர் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். இதனால், ரெயில், பஸ்களில் கூட்டம் அலைமோதி காணப்படும். ரெயில்களை பொறுத்தவரை கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் 120 நாட்களுக்கு முன்பாக ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிவிடும்.

    இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவம்பர் 12-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அந்தவகையில், தீபாவளி ரெயில் டிக்கெட் முன்பதிவு நாளை (12-ந்தேதி) முதல் தொடங்குகிறது. நாளை காலை 8 மணி முதல் ரெயில் டிக்கெட் கவுண்ட்டர்கள் மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

    நாளை முன்பதிவு செய்பவர்கள் நவம்பர் 9-ந்தேதியும், 13-ந்தேதியில் முன்பதிவு செய்தால் நவம்பர் 10-ந்தேதியும், 14-ந்தேதி முன்பதிவு செய்தால் நவம்பர் 11-ந்தேதியும், 15-ந்தேதி முன்பதிவு செய்தால் நவம்பர் 12-ந்தேதியும் பயணிக்க முடியும்.

    இந்தமுறை ஞாயிற்றுக்கிழமை விடுமுறையில் தீபாவளி பண்டிகை வருவதால் வியாழக்கிழமையில் இருந்தே பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். கடைசி நேர நெருக்கடியை தவிர்க்க பயணிகள் விரைந்து முன்பதிவு செய்யலாம்.

    • 2023 ஜனவரி 14-ந் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
    • கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்க விரும்பும் பயணிகள் முன்வந்து டிக்கெட் உறுதி செய்து கொள்ளலாம் என விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பூர்  :

    தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக (எஸ்.இ.டி.சி.,) பஸ்களில் பயணிக்க 30 நாட்களுக்கு முன்பாக பஸ் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி போக்குவரத்து துறையில் உள்ளது. வருகிற 2023 ஜனவரி 14-ந் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் ஒரு மாதத்துக்கு முன் என்ற அடிப்படையில் பொங்கலுக்கு முந்தைய நாட்களுக்கான டிக்கெட் முன்பதிவு tnstc.com என்ற இணையதளத்தில் தொடங்கி உள்ளது.

    தற்போது பெரும்பாலான விரைவு பஸ்களில் இருக்கைகள் நிரம்பாமல் காலியாக உள்ளது. கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்க விரும்பும் பயணிகள் முன்வந்து இப்போது டிக்கெட் உறுதி செய்து கொள்ளலாம் என விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 12 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்வதற்கான வரம்பை 24 ஆகவும் அதிகரிக்க இந்தியன் ரெயில்வே முடிவு செய்துள்ளது.
    • ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செயலி மூலமாக ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான வரம்பு அதிகரிக்க உள்ளது.

    புதுடெல்லி:

    ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது செயலி மூலமாக ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும்போது ஆதார் இணைக்கப்படாத பயனர் கணக்கு மூலமாக ஒரு மாதத்திற்கு அதிகபட்சமாக 6 டிக்கெட்டுகளும், ஆதார் இணைக்கப்பட்ட பயனர் கணக்கு மூலமாக 12 டிக்கெட்டுகளும் முன்பதிவு செய்வதற்கான உச்ச வரம்பாக இருந்தது.

    இந்நிலையில், பயணிகளுக்கு வசதியாக இந்த வரம்பு அதிகரிப்பட இருப்பதாக இந்தியன் ரெயில்வே அறிவித்துள்ளது.

    அதன்படி, ஆதார் இணைக்கப்படாத பயனர் கணக்கு மூலமாக ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 6 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்வதற்கான வரம்பை 12 ஆகவும் ஆதாருடன் இணைக்கப்பட்ட பயனர் கணக்கு மூலம் ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 12 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்வதற்கான வரம்பை 24 ஆகவும் அதிகரிக்க இந்தியன் ரெயில்வே முடிவு செய்துள்ளது.

    முன்பதிவு செய்யப்படும் டிக்கெட்டில் உள்ள பயணிகளில் ஒருவர் ஆதார் மூலம் சரிபார்க்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ரெயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    ×